மெல்லொளி - பாகம் 7
மெல்லொளி - பாகம் 7 “இந்த தடவ நீங்களும் பாடுங்கப்பா” “வேண்டாம்-மா, நான் வாசிக்கிறேன். நீ மட்டும் பாடு. நடேசன் சொன்னாரு, இன்னக்கு தப்லா-காரு, வறாரு-னு. ஒரு தம்பி கித்தார் எடுத்துக்கிட்டு வறாராம்.” “ரொம்ப பேரு வருவாங்க-ளா அப்பா?” தங்களுக்கு அறிமுகமானவர்களின் வீட்டு நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகள், தன் பாலர் பள்ளி நிகழ்ச்சிகள் என தனது சுற்றுவட்டாரத்தின் நிகழ்ச்சிகளில் பாடி வந்த அவளை ஒரு திருமணத்தில் பாட அழைத்தது இதுவே முதல் முறை. இந்த 20 வயதில் பல நூறு பேர் அடங்கிய சபையில் தைரியமாக பாடுவதற்கு அவளுக்கு இன்னும் துணிச்சல் வரவில்லைதான். இருந்தாலும் அப்பா தன்னுடன் இருக்கிறார் என்ற நிம்மதி. நடேசன் அந்த ரூமா மூரா தாமானில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். ஓரளவு பண வசதி படைத்தவர். அந்த வட்டாரத்திலே பெரிய வீடு அவரது வீடு. முத்த மகன் குணசேகர் வெளியூரில் வேலை பார்க்கிறான். அவனுக்கு இந்த வட்டாரத்திலேயே பெண் பார்த்திருந்தார். வீட்டில் எல்லா வசதிகளும் இருப்பதால், வீட்டிலேயே திருமண...