சிவனருளே தவம்
சிவனருளே தவம். நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன். சிந்தனைக்கு எடடாத பேரழகு மிக்க கழல் பூண்ட திருவடிகளைத் தொழுது நின்று, வானம், பூமி மற்றும் மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும் அளவிடும் எல்லைகளையெல்லாம் கடந்து அணுகுவதற்கு எளிமையாக உள்ள பெருமானே இத்தகைய அரிய பெரிய தன்மைகளை கொண்ட உன்னை, வினைகளில் மூழ்கி கிடைக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது தவிக்கின்றேன். ... .. தமிழ்த்தேனு