மெல்லொளி - பாகம் 4
மெல்லொளி - பாகம் 4
“அப்பா.. நான்
மேலே படிக்கல-பா. நின்னுக்கிறேன்”
எம்.சி.இ.
தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தன. தமிழ்
மொழி, மலாய் ஆகிய பாடங்களில் மட்டுமே சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தாள். இன்றைய எஸ்.பி.எம் அப்போதைய எம்.சி.இ. என்னவோ தெரியவில்லை
அவளுக்கு தொடர்ந்து படிப்பதில் நாட்டமும் இல்லை.
‘ நின்னுட்டு”,
என்னம்மா பண்ணப்போற?
“ம்ம்ம்..
அதான் நீங்க கத்துக்கொடுக்கிறீங்களே, சங்கீதம், மேட மேடையா ஏறி, கச்சேரி நடத்துவா” இரண்டாவது அண்ணன் சரவணன் கிண்டலடித்தான்.
அந்தக் காலக்கட்டத்தில்,
பள்ளி நிகழ்ச்சிகளிலும், அருகாமையில் உள்ள தோட்டத்து மாரியம்மன் ஆலயத்திலும், சில இல்ல நிகழ்ச்சிகளிலும் அவளை பாட அழைப்பார்கள். மாதுளம்
சுளை போன்ற அழகிய உதடுகள், தேனினும் இனிய குரல் என்று எல்லோருக்கும் அவளுடைய இசை பிடித்திருந்தது. அப்பாவைப் போல அழகு அவளிடத்தில் கொட்டிக்கிடந்தாலும்
எப்போதுமே கர்வம் கொள்பவளில்லை. மிக எளிமையாகவும்,
அந்த ரூமா மூராவில் வசிக்கும் அனைவரிடமும் மிக மரியாதையாகவும் பண்பாகவும் நடந்து கொள்வாள். அப்பாவின் வளர்ப்பு அப்படி. சரவணனுக்கு அவள் மேல் பொறாமையோ என்னவோ, அவளை பற்றி எப்போதும் குறை கூறிக்கொண்டும் இருப்பான்.
‘நீ சும்மா
இருப்பா’ மகனை செல்லமாக அதட்டி விட்டு, ஜெயந்தியை நோக்கினார்.
“சொல்லும்மா,
செல்லம், நீ என்ன செய்யப் போறே” 18 வயது மகள்
அவருக்கு இன்னும் செல்லம்தான். சில சமயங்களில் “சொல்லுடா-கண்ணூ” என்று “டா” போட்டும்
பேசுவார்.
“இங்க ஒரு
கிண்டகார்டன் சிறார் பள்ளி இருக்குதில்ல, அங்கு நான் வேல கேட்கப் போறேன். தமிழ் சொல்லிக்கொடுப்பேன், பாட்டு சொல்லிக்கொடுப்பேன். உங்கள விட்டுட்டு ரொம்ப தூரமா போக முடியாதப்பா”
கெஞ்சினாள்
செல்ல மகள் நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறாள் என்ற சந்தோஷம்
அப்பாவுக்கு.
அந்த காலக்கட்டத்தில்
பாலர் பள்ளி ஆசிரியர்களாக இருக்க வேண்டுமென்றால், அதிக கெடுபிடிகள் இல்லை. சில பயிற்சிகள்
ஒரு தேர்வு. பயிற்சிகள் முடிந்து தேர்வும்
எழுதினாள். வீட்டிலிருந்து நடந்து செல்லும்
தூரத்தில் இருந்த அந்த சிறார் பள்ளியில் அவள் விருப்பப்படியே வேலையும் கிடைத்தது.
அப்பாவுக்கு
சந்தோஷம் தாங்க முடியவில்லை. கண்ணுக்கு கண்ணான கண்மணியை பக்கத்திலேயே வைத்துக்கொள்ள
முடிந்ததே என்று.
பாலர் பள்ளி
2 மணிக்கு நிறைவு பெறும். சிறார்களை அழைத்துச்செல்ல,
அவர்கள் பெற்றோர் அல்லது அந்த ரூமா மூராவில் வசிக்கும் அக்கம் பக்கத்தினர் வந்து மற்ற
குழந்தைகளையும் கூட்டிச்செல்வர். அத்தகைய ஒற்றுமையை, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும்
பண்பை அப்போது காண முடிந்தது. யாருமே வரவில்லையென்றால்,
ஆசிரியர்களே, பணி முடிந்து அந்தச் சிறார்களை அவரவர் வீட்டில் கொண்டு விட்டு விடுவார்கள். ஜெயந்திக்கு மட்டுமல்லாது அங்கு பணி புரிந்த மற்ற
இரண்டு ஆசிரியைகளுக்கும் இந்த பணி மன நிறைவைக் கொடுத்தது.
விடு திரும்பியவுடன்
அப்பாவும் மகளும் இசைப் பயிற்சியில்.
“சின்னஞ் சிறு
கிளியே கண்ணம்மா ..செல்வக்களஞ்சியமே”
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில்
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்..ஆ..
பாரதியாரின் வரிகள்..
காபி ராகத்தில் ஜெயந்தி ஆலாபனை செய்து கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நாளும்
மாலை ஏழு மணிக்கு ராஜகோபாலின் விரல்கள் ஆர்மோனியப் பெட்டியில் நர்த்தனம் ஆடும். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் உடல் அசதியாக இருந்தாலும்
மாலையில் மகளுடன் அமர்ந்து இசைப்பயிற்சிக்காக
சில மணித்துளிகள் ஒதுக்கி வைப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார். இரவு உணவு வரை வீட்டில் இசை மழை பொழியும்.
இனிமையாக குரல்
வளமும் அவருக்கு இருந்தது. அவர் சொல்வது போல்
அது அவர் அப்பாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற வரமோ? ஜெயந்தி பெற்ற தவமோ?
மெல்லொளி மெல்ல
எழும்
Comments
Post a Comment